×

கலைஞர் நூலகத்தை பாராட்டிய அமெரிக்க பேராசிரியர்

 

மதுரை, ஆக. 18: அமெரிக்க பேராசிரியரான ஆலென் ஐஸன்ராத் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று பார்வையிட்டார். அவர் கூறும்போது, ‘‘நான் 1977-79 வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றேன். தற்போது 43 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்துள்ளேன். இங்கு அனைத்தும் புதுமையாக மாறியுள்ளது. நான் படித்த காலத்தில் இருந்த மதுரை நகரம் தற்போது சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இங்குள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டேன்.

இந்நூலகத்தின் தரைத்தளத்திலுள்ள கலைக்கூடம், முதல் தளத்திலுள்ள கலைஞர் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இரண்டாம் தளத்திலுள்ள தமிழ் நூல் பிரிவுகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் வடிவமைப்பும் பிரமாதமாக உள்ளது. இதன்படி இந்த நூலகம் அறிவுப்பூர்வமாக நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு உதவும் வகையில் அதிக அளவிலான தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post கலைஞர் நூலகத்தை பாராட்டிய அமெரிக்க பேராசிரியர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Allen Eisenrath ,Madurai Artist Centenary Library ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...