×

திருப்புத்தூரில் ரூ.6 லட்சத்தில் புதிய மின்மாற்றி

திருப்புத்தூர், ஆக.18: திருப்புத்தூரில் நேற்று ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய மின்மாற்றியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 120 வீடுகளுக்கு உட்பட்ட 130 பயனாளிகள் பயன்பெறும் வகையில் மின்மாற்றி மின்சார வாரியத்துறையால் நிறுவப்பட்டிருந்தது. இந்த மின்மாற்றியை நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருப்புத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சண்முக வடிவேல், பேரூராட்சித்தலைவர் கோகிலாராணி நாராயணன், உதவி செயற்பொறியாளர் ஜான்கென்னடி, உதவி மின்பொறியாளர்கள் முத்தரசி. சுரேஷ், சையதுகசாலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திருப்புத்தூரில் ரூ.6 லட்சத்தில் புதிய மின்மாற்றி appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Minister ,KR Periyakaruppan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை