×

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

 

கரூர், ஆக. 18: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கரூர், காசிம் தெரு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் கருப்பன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிர்வாகி ஜெகநாதன் நன்றி கூறினார்.

70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும் கருவூலம் சென்று நேர்காணலை முடித்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

The post ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Retired Officers Association ,Karur ,Tamil Nadu Retired Officers Association ,Kasim Street ,Dinakaran ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது