×

சிம் கார்டு டீலர்கள் விவரங்களை போலீஸ் சரிபார்ப்பது கட்டாயம்

புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய அரசானது 52லட்சம் மொபைல் இணைப்புக்களை துண்டித்துள்ளது. 67000 டீலர்கள் தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இருந்து தற்போது வரை சிம் கார்டு டீலர்கள் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 66ஆயிரம் கணக்குகளை வாட்ஸ்ஆப் முடக்கியுள்ளது. மோசடிகளை தடுக்கும் வகையில் சிம் டீலர்களின் விவரங்களை போலீசார் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் டீலர்களுக்கு ரூ.10லட்சம் அபராதம் விதிக்கப்படும். 10 லட்சம் டீலர்கள் உள்ளனர். அவர்களை போலீசார் சரிபார்ப்பதற்கு போதிய அவகாசம் வழங்கப்படும்” என்றார்.

The post சிம் கார்டு டீலர்கள் விவரங்களை போலீஸ் சரிபார்ப்பது கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Minister ,Ashwini Vaishnov ,Delhi ,Minister ,Union Government ,
× RELATED 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர்...