×

ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரூ.2.5 கோடியில் நடைமேம்பாலம்: அமைச்சர் தகவல்

ஆலந்தூர்: ஆலந்தூர், ஏஜெஎஸ் மேல்நிலைப்பள்ளி, நங்கநல்லூர் நேரு மேல்நிலைப்பள்ளி போன்றவற்றில் படிக்கும் 525 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் தேவி யேசுதாஸ், ரேணுகா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. 18 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பெண்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். ஆலந்தூர் – ஆதம்பாக்கம் இடையே செல்லும் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரூ.2.5 கோடியில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்பட்டு விரைவில் பணி தொடங்க உள்ளது,’’ என்றார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் தாமோதரன், பிரேமலதா, நிர்மலா, தாளாளர் தாமோதரன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், கவுன்சிலர்கள் பிருந்தா முரளிகிருஷ்ணன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரூ.2.5 கோடியில் நடைமேம்பாலம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Athambakkam ,AJS Higher Secondary School ,Nanganallur Nehru Higher Secondary School ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்