×

இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் கண் மருத்துவமனைகளை 300 ஆக விரிவாக்கம் செய்ய திட்டம்: அகர்வால் மருத்துவ குழுமம் தகவல்

சென்னை: அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் கீழ் உள்ள 150 மருத்துவமனைகளை 300 மருத்துவமனைகளாக விரிவாக்கம் செய்ய அக்குழுமம் திட்டமிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர்அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அகர்வால் கண் மருத்துவமனை இந்தியா மற்றும் வெளிநாடு என 155 இடங்களில் இயங்கி வருகிறது. இதனை அடுத்து 2 ஆண்டிற்குள் 300 ஆக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கடந்த 2 ஆண்டில் மொத்தம் 1,700 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 650 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து 1200 கோடி ரூபாயில் புதிய மருத்துவமனைகள் பல்வேறு நாடுகளில் அமைக்க உள்ளோம்.

இதில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனையை திறக்க இருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஏற்கனவே 40 இடங்களில் எங்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்னும் 10 இடங்களில் மருத்துவமனை அமைக்க இருக்கிறோம். மேலும் கண் சிகிச்சையகம் (Eye clinic) எங்கள் மருத்துவமனை சார்பாக தமிழ்நாட்டில் 12 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனை 50 இடங்களாக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இந்த சிகிச்சையகத்தில் மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்ய இருக்கிறோம். பரிசோதனையில் ஏதாவது சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தால் அருகில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்க இருக்கிறோம்.

அங்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். புதிதாக 300 மருத்துவமனைகள் திறக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எங்களது நோக்கம் தரமான சிகிச்சை வழங்குவது தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் கண் மருத்துவமனைகளை 300 ஆக விரிவாக்கம் செய்ய திட்டம்: அகர்வால் மருத்துவ குழுமம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Agarwal Medical Group ,Chennai ,Agarwal Eye Hospital Group ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்