×

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் அதிகபட்சமாக குஜராத்தில் 38.09% பேர் பாதிப்பு: நிதி ஆயோக் ஆய்வறிக்கை

டெல்லி: இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில், அதிகபட்சமாக குஜராத்தில் 38.09% பேர் பாதிப்படைந்துள்ளதாக நிதி ஆயோக்-ன் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. கர்நாடகாவில் 7.58%, பஞ்சாப்பில் 4.7%, தமிழ்நாட்டில் 2.20%, கேரளாவில் 0.55% மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நிதி ஆயோக் வெளியிட்ட தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (எம்பிஐ) அறிக்கையின்படி, குஜராத் மாநிலத்தில் 38.09 % மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர். குஜராத்தின் கிராமப்புற மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் ஊட்டச்சத்து இல்லாமல் உள்ளனர் (44.45 %), நகர்ப்புறங்களில் 28.97 % பேர் ஊட்டச்சத்து குறிபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர்.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் குஜராத்தை விட ஊட்டச்சத்து முன்னணியில் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. NFHS5 (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு) தரவுகளின்படி, வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அடிப்படையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் உள்ள குழந்தைகளில் 39 %பேர் தங்கள் வயதுக்கு ஏற்ப எடை குறைவாக உள்ளனர். மேலும், குஜராத் மாநிலம் எடை குறைந்த குழந்தைகள் 39.7 % -துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சுகாதார அளவீடுகளின் அடிப்படையில் மாநிலத்தின் மோசமான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.

“2016 ஆம் ஆண்டில், ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிர காரணமாகும், மேற்கு வங்க குடும்பங்களில் 33.6 % மற்றும் குஜராத் குடும்பங்களில் 41.37 % குறைந்தது ஒரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. 2021-ல், இந்த எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் 27.3 சதவிகிதமாகவும், குஜராத்தில் 38.9 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள ஒவ்வொரு 100 நபர்களில் மூன்று பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தரவு தெளிவாகக் காட்டுகிறது, அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் 100 பேரில் ஆறு பேருக்கும் குறைவானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் அதிகபட்சமாக குஜராத்தில் 38.09% பேர் பாதிப்பு: நிதி ஆயோக் ஆய்வறிக்கை appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Nidhi Ayog ,Delhi ,India ,Nidhi Aayok ,
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்