×

கசகசா மாஸ்க்!

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் அதிகம் பயன்படுத்தப்படாமல் அமைதியாக இருக்கும் ஒரு பொருள் கசகசா. ஆனால் இது உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல , உடலுக்கு வெளிப்புறமும் சரும ஆரோக்கியத்தில் பல நலன்களைக் கொடுக்க வல்லது. இதோ முகம் பிரகாசிக்க சில கசகசா மாஸ்க்கள்.
 தயிரில் கசகசாவை சேர்த்து கலந்து முகத்தில் ஸ்க்ரப்பர் போல் பயன்படுத்த இறந்த செல்கள், வறண்ட சருமப் பிரச்னைகள் சரியாகி முகம் புத்துணர்வு பெறும்.
 பாலுடன் கசகசாவை சேர்த்து அரைத்து அந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வறண்ட, சுருக்கங்கள் நிறைந்த சருமம் புத்துணர்வு பெற்று உடனடி பளபளப்புக் கிடைக்கும்.
 சிலருக்கு வெயில் அதிகமானால் அரிப்பு, எரிச்சல் சருமத்தில் உண்டாகும். அவர்கள் பாலில் கசகசாவை ஊறவைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிவர குணமாகும்.
 கைநிறைய கசகசாவை எடுத்துக்கொண்டு உடன் தயிர், வெள்ளை நிற மிளகு கலந்து அரைத்து அதனை அப்படியே தலை முடியில் பேக் போல் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடவும். பொடுகுத் தொல்லை
இனி இல்லை என சொல்வீர்கள்.
 கசகசா , புதிதாக எடுத்த தேங்காய்ப்பால், உடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து முடியில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசவும். இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் செய்ய தலைமுடி வளர்ச்சியில் முன்னேற்றம் தெரியும்.
– கவின்

The post கசகசா மாஸ்க்! appeared first on Dinakaran.

Tags : kasakasa ,kasasa ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு