×

ஹாலிவுட் பட விபத்து காட்சி போன்று அர்ஜென்டினாவில் ஓடும் பேருந்தில் தீ : கண நேரத்தில் எலும்புக்கூடு போல் ஆனது!!

பியூனஸ் அயர்ஸ் : ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் விபத்து காட்சி போன்று அர்ஜென்டினாவில் ஓடும் பேருந்தில் தீப்பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள ஜெனரல் பாஸ் என்ற நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென அந்த பேருந்தின் முன்பகுதியில் புகை வந்ததை தொடர்ந்து பேருந்தை சாலையின் ஓரமாக ஓட்டுநர் நிறுத்தினார். அதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.

சில வினாடிகளில் வேகமாக பரவிய தீயால் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் பாய்ந்தது. சாலையின் குறுக்காக வழிந்து ஓடிய டீசலில் தீப்பிடித்தது. விபத்துக்குள்ளான பேருந்து கன நேரத்தில் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த விபத்தால் ஜெனரல் பாஸ் நெடுஞ்சாலையில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் போக்குவரத்து காவல்துறையின் கேமராக்களில் பதிவாகி உள்ளன. பேருந்து எஞ்சினில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

The post ஹாலிவுட் பட விபத்து காட்சி போன்று அர்ஜென்டினாவில் ஓடும் பேருந்தில் தீ : கண நேரத்தில் எலும்புக்கூடு போல் ஆனது!! appeared first on Dinakaran.

Tags : Argentina ,Hollywood ,Buenos Aires ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...