திருப்புத்தூர், ஆக 17: திருப்புத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்புத்தூர் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், பரணபாஸ் அந்தோணி முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழுத் தலைவர் சண்முகவடிவேல் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மும்தாஜ் தேசிய கொடியை ஏற்றினார். திருப்புத்தூர் பேரூராட்சியில் சேர்மன் கோகிலாராணி நாராயணன், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் ஜெகதீஸ்வரன் கொடியேற்றினர்.
கீழச்சிவல்பட்டியில் பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். சிங்கம்புணரியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தேசியக் கொடியேற்றினார். இதில் ஆணையாளர் ராஜேந்திர குமார் பிடிஒ லட்சுமனராஜு ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி பேரூராட்சியில் தலைவர் அம்பலமுத்து கொடியேற்றினார். செயல் அலுவலர் சண்முகம், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில் கொடி ஏற்றினார். உதவி தலைமை ஆசிரியர் அன்பு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் விஜயா குமரன் கொடியேற்றினார். ஆணையாளர் ராஜேஷ், பிடிஒ சத்யன், ஒன்றிய அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பிரான்மலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், அரளிக்கோட்டையில் தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், மருதிபட்டியில் தலைவர் வெண்ணிலா வெங்கடேஷ் கொடியேற்றினர்.
The post திருப்புத்தூர்,சிங்கம்புணரியில் பள்ளி,கல்லூரிகளில் சுதந்திர தினவிழா appeared first on Dinakaran.
