×

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம்: கிராம பஞ்சாயத்து தலைவர் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில் மூன்றாம் பலினத்தவர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி அதற்கான பட்டாவையும் வழங்கியுருந்தது. இந்த பட்டாவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன், கிரம பஞ்சாயத்து தலைவர் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தார். கடந்த மே மாதம் அளித்த அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிப்தி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு தாரரின் கோரிக்கை மனுவில் இருந்து, அவர் முன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை கொண்டிருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மனு தாரரான கிராம பஞ்சாயத்து தலைவரான மோகன் என்பவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டது, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கபட்டது என்று விளக்கமளிக்கவும், மோகன் என்பவருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

The post மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம்: கிராம பஞ்சாயத்து தலைவர் விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCort ,Gram Panchayat ,Chennai ,Nainarkupam ,Vadalur district ,Cuddalore ,Ikord ,Grama Panchayat ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...