×

டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட்

டிவிஎஸ் நிறுவனம், ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. பிளாக் பாந்தர் மற்றும் அயர்ன் மேன் ஆகிய தீம்களில் இந்த பைக்குகள் அசத்தலான கிராபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி ஏற்கெனவே உள்ள ரைடர் பைக்குகளின் தோற்றத்தில் வேறு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், ஸ்பிளிட் சீட் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 11.2 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்குவாட் எடிஷனின் ஷோரூம் விலை சுமார் ரூ.98,919 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட் appeared first on Dinakaran.

Tags : TVS ,Black Panther ,
× RELATED ஈரோட்டில் பரபரப்பு அரசு மல்டி...