×

தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தை அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் ராஜா ராஜகோபால தொண்டைமானுக்கு அரசு சார்பில் 3 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கான இடத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சிலையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற கிளை அச்சகங்கள் போன்று புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்துக்கும் நவீன வசதிகள் கொண்ட பிரிண்டிங் மெஷின் வழங்கப்பட உள்ளது. பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேற்று சுதந்திர தின உரையில் 55,000 அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும். தமிழக அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்று அரசாணை உள்ளது. அதை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. வணிக நிறுவனங்களில் பெயர்கள் தமிழில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. விரைவில் ஆய்வு செய்து தமிழில் இடம்பெறாத கடைகளை கண்டறிந்து, தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Saminathan ,Pudukottai ,Ministers ,Vellakoil Saminathan ,Raghupathi ,Meiyanathan ,Pudukottai Government Branch Press ,Minister ,Saminathan ,
× RELATED புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்...