பாங்காக்: தாய்லாந்து தேர்தலில் வெற்றி பெற்று 4 மாதங்களாகியும் பிரதமர் வேட்பாளருக்கு மேலவையில் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டின் மூபவர் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தாய்லாந்தில் கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு போட்டியிட்டன. இதில் பிரதான எதிர்கட்சியான முபார்வர்டு கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த தேர்தலில் 500 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் முபார்வர்டு கட்சி மற்றும் பியூதாய் கட்சி ஆகியன இணைந்து பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று வெற்றி பெற்றன. இதனால் மக்கள் செல்வாக்கு பெற்றவர் பிரதமராவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மேலவையில் ராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் முபார்வர்டு கட்சி வேட்பாளர் பெரும்பான்மை இழந்ததாக தெரிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பியூதாய் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முபார்வர்டு கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதனால் அங்கு 4 மாதங்களாக பிரதமர் பதவி ஏற்பதில் சிக்கல் நீடித்த வருகிறது. இதற்கிடையே மேலவை தேர்தலின் முடிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக முபார்வர்டு கட்சி சார்பில் அந்நாட்டு ஜனநாயக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பிரதமர் வேட்பாளர் அல்லாத சிலர் கூட்டாக தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
The post தாய்லாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்: தேர்தலில் வென்றும் ஆட்சியமைக்க முடியாமல் திணறும் பார்வார்டு கட்சி appeared first on Dinakaran.
