×

ஒன்றிய அரசில் 1342 ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1342 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: ஜூனியர் இன்ஜினியர். மொத்த இடங்கள்: 1342.
சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 1.8.2023 தேதியின்படி 30க்குள். Central Water Commission/Central Public Works Department பணிக்கு 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்க இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷனால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எஸ்எஸ்சி தேர்வு தாள்-1ல் கொள்குறிவகை கேள்விகளும், தாள்-2 ல் விரிவாக விடையளிக்கும் கேள்விகளும் கேட்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரியிலும் தேர்வு நடைபெறும.www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (16.8.2023).

The post ஒன்றிய அரசில் 1342 ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்