×

காவிரியில் நீர்வரத்து 10,000 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளதால் இன்று ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிவாகம் தடை விதித்தது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிறைந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 14,134 கனஅடி தண்ணீர் திறக்கபட்டுள்ள நிலையில், 3 நாட்களுக்கு பிறகு தமிழக, கர்நாடக எல்ல்லையான பிலி குண்டுலூ வழியாக ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரபடி 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிபடியாக அதிகரித்து மதியம் 1 மணியளவில் வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுளா பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒக்கேனக்கலில் உள்ள ஐவர் பாணி அருவி, சினிஅருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

The post காவிரியில் நீர்வரத்து 10,000 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை appeared first on Dinakaran.

Tags : District Administration ,Ogenakal ,Tharumapuri ,Ogenakal Kaviri ,Karnataka Dams ,Tamil Nadu ,Canadi ,Dinakaran ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...