×

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், நடைபெற்ற சமத்துவ விருத்தில் பொதுமக்களுடன் உணவருந்தினார் அமைச்சர் உதயநிதி!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர்

டாக்டர் க. மணிவாசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் க.வீ. முரளீதரன், சென்னை மாநகராட்சி நிலைகுழுத் தலைவர் (பணிகள்) என். சிற்றரசு, மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், நடைபெற்ற சமத்துவ விருத்தில் பொதுமக்களுடன் உணவருந்தினார் அமைச்சர் உதயநிதி! appeared first on Dinakaran.

Tags : eve ,independence day ,thiruvallykeeni ,parthasarthasarathy ,minister ,udayanthi ,Chennai ,Chennai Thiruvallykeeni Parthasarthasarthi Swami Temple ,Udhayanidhi ,Thiruvallikekeni Parthasarathy Temple ,
× RELATED சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது