×

துப்பாக்கிச் சூடு நடத்தி சுதந்திர தின விழா: பாகிஸ்தானில் 2 பேர் பலி 85 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தி சிலர் சுதந்திர தினம் கொண்டாடிய போது, பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் நேற்று நாட்டின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் சிலர், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலரது மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் பலியாகினர். 85 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி சையத் ஹுஸ்னைன் ஹைதர் கூறுகையில், ‘சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சட்டத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இருந்தும் கராச்சி பகுதியில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளனர்.

அப்போது பைக்கில் சென்ற பெண் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்தார். அதேபோல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். 85 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

The post துப்பாக்கிச் சூடு நடத்தி சுதந்திர தின விழா: பாகிஸ்தானில் 2 பேர் பலி 85 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Pakistan ,Islamabad ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா