திருவாரூர், ஆக.15: ஒன்றிய அரசு கர்நாடகாவிலிருந்து உரிய நீரை பெற்று தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்டாவில் கருகும் குறுவைப் பயரை காப்பாற்றிட காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி உரியநீரை திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை மற்றும் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூரில் நேற்று புதிய ரயில் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் தம்புசாமி, பொருளாளர் பிரகாஷ், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கலைமணி, முருகையன், ராகுராமன் மற்றும் திருவாரூர் ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கர்நாடகாவிலிருந்து ஒன்றிய அரசு காவிரிநீர் பெற்றுத்தர கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
