×

கள்ளக்காதலியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை

 

கோவை, ஆக.15: கோவை சிட்கோ பிள்ளையார் புரம் அய்யப்பன் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (29). கூலி தொழிலாளி. திருமணமானவர். இவருக்கும் இவர் வசிக்கும் தெருவை சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை குடும்பத்தினர் கண்டித்தும் அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இரவு வேலை முடிந்து வந்த முத்துக்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்காதலியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Muthukumar ,Chitco Pilliyar Puram Ayyappan Street, ,Dinakaran ,
× RELATED கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல்...