×

விபத்து காப்பீட்டு திட்டத்தில் 7 மாணவர்களுக்கு ரூ.5.25 லட்சம் நிதி உதவி

பெரம்பலூர்,ஆக.15: பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் 7 மாணவர்களுக்கு ரூ5.25 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவித் தொகைக்கான பத்திரங்களை மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (14ம் தேதி) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்து பொது மக்களிடருமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது: அரசின் சார்பில் செயல் படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு அலுவலர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

வாரந்தோறும் பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து அடுத்த வார மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக் கப்படும். உரிய காரணங் கள் ஏதுமின்றி பொதுமக்க ளின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தாமதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் உரிய விளக்கம் கோரப் படும். எனவே, அலுவலர் கள் தனிக்கவனம் செலு த்தி பொதுமக்களின் மனுக்களின் மிது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். முன்னதாக கடந்த வார பொது மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத் திறனாளியான குழந்தை என்பவரது மனுவிற்கு உடனடியாக தீர்வுகாணும் வகையில் நேற்று நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவசமாக காதொலி கருவியை கலெக்டர் வழங் கினார்.

மேலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த 7 மாணவர்களுக்கு தலா ரூ.75ஆயிரம் வீதம் ரூ5.25 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவித் தொகைக்கான பத்திரங்களை வழங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, வித வை உதவித்தொகை, ஆதர வற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 297 மனுக்கள் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத் திட்ட இயக்குநர் அருணாச்சலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உத வியாளர் (பொது) மஞ்சுளா, ஊராட்சிகள் உதவி இயக் குநர் அருளாளன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவ லர் பொம்மி மற்றும் அனை த்துத் துறைகளின் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

The post விபத்து காப்பீட்டு திட்டத்தில் 7 மாணவர்களுக்கு ரூ.5.25 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District ,Public People's Reduction Day Meeting ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...