×

76 தேசிய கொடிகளை இலவசமாக வழங்கிய 4ம் வகுப்பு மாணவி வேலூர் டிஆர்ஓ பாராட்டு சேமிப்பு பணத்தில் பொதுமக்களுக்கு

வேலூர், ஆக.15: வேலூரில் சேமிப்பு பணத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக 76 தேசியக்கொடிகளை வழங்கிய 4ம் வகுப்பு மாணவியை டிஆர்ஓ உட்பட அனைவரும் பாராட்டினர். வேலூர் அல்லாபுரம் பகுதியை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ராஜா என்பவரது மகள் மோனிகா(10). இவர் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உண்டியலில் ₹2 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வீடுகள் ேதாறும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையறிந்த சிறுமி மோனிகா, தனது சேமிப்பு பணத்தில் இருந்து 76 தேசியக்கொடிகளை வாங்கினார். பின்னர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு பெற்றோருடன் சிறுமி மோனிகா வந்தார். அப்போது டிஆர்ஓ மாலதியிடம் ஒரு தேசிய கொடியை வழங்கினார். அவரை டிஆர்ஓ பாராட்டி வாழ்த்தினார். தொடர்ந்த சிறுமி மீதமுள்ள கொடிகளை குறைதீர்வுகூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் வீடுகளில் ஏற்றி மரியாதை செலுத்த இலவசமாக வழங்கினார். இதனால அனைவரும் சிறுமியை பாராட்டினர்.

The post 76 தேசிய கொடிகளை இலவசமாக வழங்கிய 4ம் வகுப்பு மாணவி வேலூர் டிஆர்ஓ பாராட்டு சேமிப்பு பணத்தில் பொதுமக்களுக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,TRO ,
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை