×

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்த இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வந்து சேர்ந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா -எல்1 திட்டம் இஸ்ரோவால் சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள் ஆகும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலங்களை அனுப்பியுள்ளன.

மேலும். ஆதித்யா -எல்1 விண்கலம் முதன்முறையாக இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்படும் செயற்கைகோள் என்ற பெருமையை பெறுகிறது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கைக் கோள், சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில், இரு கோள்களின் ஈர்ப்பு விசை சரிசமாக இருக்கும் லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One)-ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்படும். ஆகஸ்ட் இறுதி வாரத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதால் அதன் இறுதி கட்ட பணிகள் தீவிராக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படுவதற்கு தயாராகி வருகிறது. அந்த வகையில், பெங்களூரு யூஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) இருந்து ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு (SDSC-SHAR) வந்தடைந்தது. இவ்வாறு இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

The post சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்த இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Sun ,Sriharikota Sadish Dawan Space Centre ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...