×

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அன்னதான கூடம் உட்பட ரூ.80.56 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80 கோடியே 56 லட்சத்தில் கோயில்களில் கட்டப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.4.80 கோடியில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள், சென்னை பள்ளிக்கரணை வீரத்தம்மன் கோயிலில் ரூ.4 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.14 கோடியில் திருக்குள திருப்பணி, சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் ரூ.2.27 கோடியில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் ரூ.8.37 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ரூ.1.25 கோடியில் அன்னதானக் கூடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.80 கோடியே 56 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.

The post மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அன்னதான கூடம் உட்பட ரூ.80.56 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Annadana Hall ,Kapaleeswarar Temple ,Mylapore ,CHENNAI ,Annadana Kudam ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...