×

சோழவரம் ஜிஎன்டி சாலையில் பைக் மீது லாரி மோதி 2 பேர் பரிதாப பலி

புழல்: சோழவரம் ஜிஎன்டி சாலையில் செங்காளம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செங்குன்றத்தில் இருந்து சோழவரம் நோக்கி பைக்கில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, பைக்கின்மீது நேருக்கு நேராக மோதியது. இதனால் பைக்கில் சென்ற 2 பேரும் நிலைதடுமாறி, ஜிஎன்டி சாலையில் விழுந்தனர். இதில் அவர்களின் தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், உயிரிழந்த இருவரும் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த முத்தரசன்(34), செந்தில்குமார்(45) என்பதும், இவர்கள் சோழவரம் லாரி பார்க்கிங் ஷெட்டில் தங்கியிருந்து, டிரைவர்களாக வேலை பார்த்து வந்ததும், செங்குன்றம் சென்றுவிட்டு சோழவரம் நோக்கி வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post சோழவரம் ஜிஎன்டி சாலையில் பைக் மீது லாரி மோதி 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Cholavaram GND road ,Sengalamman temple ,Sengunram, Cholavaram ,Dinakaran ,
× RELATED இலச்சிவாக்கம் செங்காளம்மன் கோயிலில்...