×

ஸ்ரீ கோல(ம்) கொண்ட அம்மன் ஆலயத்தில் 36ம் ஆண்டு பால் குட அபிஷேகம்

திருவள்ளூர்,: திருவள்ளூர், முகமது அலி தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கோல(ம்) கொண்ட அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் 36ம் ஆண்டாக ஆடி மாதம் 4வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தில் இருந்து கைலாய வாத்தியத்துடன் 108 பால்குடம் மற்றும் ஸ்ரீ கோல(ம்) கொண்ட அம்மனுக்கு வரிசை கொண்டு வரப்பட்டு பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சமபந்தி போஜனமும், மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பும், அருள்மிகு விநாயகருக்கு விபூதி காப்பும், ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு குங்கும காப்பும், ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், உற்சவருக்கு சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் மற்றும் திருவள்ளூர், முகமது அலி தெரு நண்பர்கள், விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீ கோல(ம்) கொண்ட அம்மன் ஆலயத்தில் 36ம் ஆண்டு பால் குட அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Bal ,Sri Gola(M) Kondana Amman ,Temple ,Thiruvallur ,Mohammed Ali Street ,Sri Gola( ,Amman ,Sri Gola(m ,Kondana Amman temple ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்