×

ஆர்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிப்பட்டு,: ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அவசர உதவி எண் 108 ஆம்புலென்ஸ் ஊழியர்கள் மற்றும் தி சில்ரன் தொண்டு நிறுவனம் சார்பில் அவசரகால முதலுதவி அளிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்தார். இந்த முகாமில் 108 அவசர உதவி ஆர்.கே.பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் திலீப், அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை, உரிய நேரத்தில் 108 அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் காப்பாற்ற முடியும் என்றும் மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினார். நிறைவாக முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்.

The post ஆர்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Pallipattu ,Adivaraghapuram Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED அம்மையார்குப்பத்தில் திரவுபதி அம்மன்...