×

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.4.80 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

பூந்தமல்லி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், புதிய கட்டடங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். கோயில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கப்பட்டது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் ஆந்திரம், கர்நாடகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இந்த கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசின் அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக புதிதாக ரூ.4.80 கோடி மதிப்பில் அன்னதான கூடம், தரைத்தளத்தில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், முதல் தளத்தில் உணவு கூடம், இரண்டாம் தளத்தில் பல்வேறு உபயோகங்களுக்கான கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கோயில் வளாகத்தில் இணை ஆணையர் முல்லை தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது,

இதில், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், முன்னாள் அறங்காவலர் லயன் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர் டெக்கான் என்.கே.மூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் குருநாதன், சுடலைமணி, அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.4.80 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu Devi Karumariyamman Temple ,Chief Minister ,M. K. Stalin ,Poontamalli ,M.K.Stalin ,Thiruvekadu Devi Karumariamman ,Temple ,Thiruvekadu Devi Karumariamman Temple ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு