×

தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் செங்கோட்டையில் மோடியின் கடைசி உரை இதுதான்: மம்தா கருத்து

கொல்கத்தா; மேற்குவங்க மாநிலம் பெஹாலாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா விரைவில் களத்தில் இறங்கும். இன்று செங்கோட்டையில் இருந்து பிரதமராக மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாகத்தான் இருக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பாஜவை அழிக்கும். நான் பிரதமராகும் லட்சியங்களை கொண்டிருக்கவில்லை. ஆனால் பா.ஜ அரசை மத்தியில் இருந்து அகற்ற நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் செங்கோட்டையில் மோடியின் கடைசி உரை இதுதான்: மம்தா கருத்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Senkotte ,India Alliance ,Mamta ,Chief of State ,Mamta Panerjhi ,Western State of ,Behala, Kolkata ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை