×

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவுள்ளேன்: நீதிபதி சந்துரு தகவல்

சென்னை: நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவுள்ளேன் என்று நீதியரசர் சந்துரு தகவல் தெரிவித்துள்ளார். மாணவன் படித்த பள்ளி, விடு, சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தப்படும். நெல்லை நாங்குநேரி சாத்திய வன்கொடுமை சம்பவம் தொடர்பான ஒரு நபர் குழு தலைவர் சந்துரு தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்று அரசுக்கு அறிக்கை தர விசாரணை குழு தீட்டமிட்டுள்ளது.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். சின்னத்துரை 12ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் தான் சின்னத்துரையை சில மாணவர்கள் சாதிய பாகுாட்டை காட்டியுள்ளனர். படிக்கவிடாமல் இடையூறு செய்ததோடு கடைகளுக்கு சென்று உணவு, டீ வாங்கி வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சின்னத்துரை மனம் உடைந்து பள்ளி செல்லாமல் இருந்தார்.

இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது. இந்த கோபத்தில் சில மாணவர்கள் இரவில் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இருவரும் மீட்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணனாக சின்னத்துரையின் கல்லூரி படிப்புக்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு சின்னத்துரைக்கு 18 வயது நிரம்பிய பிறகு மக்கள் நல்வாழ்வு துறையில் பணி வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவுள்ளேன்: நீதிபதி சந்துரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Sadhaya ,Judge ,Santhuru ,Chennai ,Justice ,Sanduru ,Sadithya ,Student School ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...