×

திருப்பதியில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது..!!

ஆந்திரா: திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூல் சரக டிஐஜி செந்தில் குமார் தலைமையில் செம்மரக்கடத்தலுக்கான சிறப்பு அதிரடிப்படை போலீஸ் செயல்பட்டு வருகிறது. இவர்கள் வழக்கம் போல் திருப்பதியை அடுத்த ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகே இருக்கக்கூடிய லட்சுமிபுரம் என்ற இடத்தில் சோதனைக்கு சென்ற போது ஒரு தமிழரை கைது செய்து செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று கடப்பா மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி என்ற இடத்திலும் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள சன்னிபாய என்ற 3 இடங்களில் நடைபெற்ற சோதனையில் வனப்பகுதியிலிருந்து செம்மரங்களை 5 கார்கள். ஒரு ஆட்டோ மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி கடத்தலுக்கு முயன்ற நிலையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 51 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் அனைத்தும் ஏ கிரேட் மதிப்பை கொண்ட செம்மரங்கள் என்பதால் இவை மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என்று டிஎஸ்பி செஞ்சுபாபு தெரிவித்துள்ளார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 48 பேரில் பலர் ஏற்கனவே செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து அவர்கள் மீது பீடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாக டிஎஸ்பி செஞ்சுபாபு தெரிவித்துள்ளார். நித்திரை மாநில வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவரையும் திருப்பதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஆந்திர அதிரடிப்படைப் போலிசார் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருப்பதியில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tiruppati ,Andhra Pradesh ,AP State Kornool ,
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...