×

பெருந்துறையில் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு, ஆக.14: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 1 கோடியே 30 லட்சத்துக்கு நேற்று முன் தினம் கொப்பரை ஏலம் நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம் தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,483 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் முதல்தர கொப்பரைகள் 1,690 மூட்டைகள் வரப் பெற்றன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 77.06க்கும், அதிகபட்சமாக ரூ.80.39க்கும் விற்பனையாகின. இரண்டாம் தர கொப்பரைகள் 1,793 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 48.88க்கும், அதிகபட்சமாக ரூ.78.28க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரம் கிலோ எடையிலான கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post பெருந்துறையில் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Erode ,Large Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு