×

பொது இடத்தில் சூதாடிய 15 பேர் கைது

 

பாலக்காடு, ஆக.14: பாலக்காடு மாவட்டத்தில் கொழிஞ்சாம்பாறை, செருப்புழச்சேரி ஆகிய இடங்களில் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து 43 ஆயிரத்து 930 ரூபாயை பறிமுதல் செய்தனர். பாலக்காடு மாவட்டம், செருப்புழச்சேரி அருகே கரளம்பற்றப்பாறை என்கிற இடத்தில் சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் பொது இடத்தில் பணம் கட்டி சூதாடிய யூசப் (50), பவாஸ் (35), ஐயப்பன் (53), இப்ராஹிம் (50), மொய்தீன் (44), முகமது நவுசாத் (41), மொய்தீன் (45), பிரஜீஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து 11 ஆயிரத்து 930 ரூபாயை பறிமுதல் செய்தனர். கொழிஞ்சாம்பாறை அருகே எல்லப்பட்டான் கோயில் என்கிற பகுதியில் பணம் வைத்து சூதாடியவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் (62), சதீஷ்குமார் (29), வேல்முருகன் (42), சுரேஷ் (44), சனோஜ்குமார் (43), சுனில்குமார் (40), பெரும்பாறைசள்ளை ரமேஷ் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கண்ட இரண்டு இடங்களில் மொத்தம் 43 ஆயிரத்து 930 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பொது இடத்தில் சூதாடிய 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kojinchamparai ,Cherupuzacherry ,Dinakaran ,
× RELATED தென் மேற்கு பருவமழை தீவிரம்