×

கோட்டையூர் பேரூராட்சியில் பழம் தரும் மரக்கன்று நட திட்டம்: பேரூராட்சி தலைவர் தகவல்

 

காரைக்குடி, ஆக.14: காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் சுந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடந்தது. செயல் அலுவலர் கவிதா வரவேற்றார். துணைத்தலைவர் ராஜேஸ்வரி அழகப்பன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் கார்த்திக்சோலை திட்டத்தை துவக்கிவைத்து பேசுகையில், கோட்டையூர் பேரூராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீரை சேமிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சுதந்திரதினத்தை முன்னிட்டு 76 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

முதல்வரின் உத்தரவின்படி நீர்நிலைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துணையுடன் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி பெறப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. குளங்கள், தெருக்கள் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள், வளம்மீட்பு பூங்காக்களில் பழம் தரும் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரவும், வரத்து கால்வாய்களை சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த ஒரு ஆண்டில் சாலை, கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு போன்ற மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார். பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டையூர் பேரூராட்சியில் பழம் தரும் மரக்கன்று நட திட்டம்: பேரூராட்சி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kotayur Municipality ,Karaikudi ,Kotdaiyur ,Sundra Day ,
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்