×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 

வேதாரண்யம்,ஆக.14: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது சாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.

இதைப்போல மறைஞாயநல்லூர், மேல மறைக்காடர் ஆலயம், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், வடமறைக்காடர் கோயில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழவர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோயில், வெள்ளப்பள்ளம் சிவன் கோயில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோயில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோயில், அகரம் அழகியநாதர் கோயில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோயில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோயில், கத்தரிப்புலம் கோயில்குத்தகை காசிநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

The post சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pratosha Worship ,Shiva Temples ,Vedaranya ,Swami ,Nandikeswarar ,Vedaranya Vedaryeswarar Swami Temple ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு