×

பாஜவின் மிகப்பெரிய தொண்டன் கவர்னர்: முத்தரசன் கிண்டல்

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பை சேர்ந்தவராகவும், பாஜவின் மிகச்சிறந்த தொண்டராகவும் இருந்து வருகிறார். எனவே அவர் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தன்னுடைய கட்சிக்கு சிறப்பாக தொண்டு செய்யட்டும். நீட் தேர்வு விவகாரத்தில் அதிக அளவில் பயனடைபவர்கள் கோச்சிங் சென்டர்கள் தான். தமிழகத்தில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிப்பதை கவர்னர் உடனடியாக கைவிட வேண்டும். பொதுவெளியில் நான் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது அபத்தமானது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவின் மிகப்பெரிய தொண்டன் கவர்னர்: முத்தரசன் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan Kindal ,Trichy ,Communist ,Mutharasan ,Governor ,Ravi ,RSS ,Dinakaran ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...