×

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்: அமித் ஷா பேச்சு

மான்சா: ‘ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள மான்சா நகரில் தேசிய பாதுகாப்பு படையின் பிராந்திய அலுவலக கட்டிடத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனாலும் நீங்கள் அவர்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றுதான் குறிப்பிட வேண்டும். ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு யார் வாக்களிப்பார்கள்?‘புதிய பாட்டிலில் பழைய ஒயின்’ என்ற பழமொழியை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள்.

ஆனால் இங்கு பாட்டிலும் பழசு, அதில் உள்ள ஒயினும் பழசு. எனவே, ஏமாந்து விடாதீர்கள். பிரதமர் மோடியின் தலைமையில் பாஜ கூட்டணி முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். நம்முடைய ஒவ்வொரு வீட்டிலிருந்தும், தேசப்பற்று கொண்ட 5 குழந்தைகளை வளர்ப்போம். அவர்களின் முழு வாழ்க்கையையும் நாட்டிற்காகவும், கலாச்சாரத்திற்காகவும், மொழிக்காகவும் அர்ப்பணிப்போம். இந்த அமிர்த காலம் நம் இளைய தலைமுறையினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் தேசத்தை மேம்படுத்த, சிறந்ததாக மாற்ற இளம் தலைமுறையினர் பாரத மாதாவுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்: அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Mansa ,Union Home Minister ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...