×

பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழப்பு

பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழந்தனர். பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு சென்றுகொண்டிருந்த போது அகதிகள் 65 பேருடன் ஆங்கில கால்வாயில் சென்ற படகு கவிழ்ந்தது. சில பயணிகள் இன்னும் காணவில்லை, மேலும் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டனர்.

இரண்டு பிரிட்டிஷ் கப்பல்கள் மற்றும் பிரெஞ்சு கப்பல்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நேற்றூ அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே மீட்பு பணி தொடங்கபட்டது. தேடுதல் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. மீட்கபட்டவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ப்ளூவியர், நோட்ரே டேம் டு ரிஸ்பன், அபேயில் நார்மண்டி மற்றும் கார்மோரன் ஆகிய நான்கு பிரெஞ்சு கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒரு பிரெஞ்சு ஹெலிகாப்டரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

The post பிரிட்டனில் ஆங்கில கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 அகதிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : English canal ,UK ,Britain ,France ,Canal ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...