×

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் துணிகர திருட்டு

 

விருத்தாசலம், ஆக. 13: விருத்தாசலம் அடுத்த மணலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(22). இவரது தாயார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தினமும் இரவில் வீட்டின் அருகே இருக்கும் மாமா வீட்டில் தூங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது மாமா வீட்டிற்கு சென்று தூங்கி விட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்மமநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் துணிகர திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Balaji ,Manalur ,Vriddhachalam ,
× RELATED மாசி மகத்தையொட்டி விருத்தாசலத்தில்...