×

நாடாளுமன்ற தேர்தல் நடத்த வசதியாக பாகிஸ்தான் தற்காலிக பிரதமராக அன்வர் உல்-ஹக் நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தற்காலிக பிரதமராக அன்வர் உல்-ஹக் கக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏதுவாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க முடிவு செய்தார்.

இதற்கான பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் ஆல்விக்கு ஷெபாஸ் ஷெரீப் கடந்த 10ம் தேதி அனுப்பி வைத்தார். இதையேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் பிறப்பித்தார். இதையடுத்து செனட்டர் அல்வர் உல்-ஹக் தற்காலிக பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் வரை பாகிஸ்தானின் தற்காலிக அரசாங்கத்தை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் நடத்த வசதியாக பாகிஸ்தான் தற்காலிக பிரதமராக அன்வர் உல்-ஹக் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Anwar ul-Haq ,Prime Minister of Pakistan ,Islamabad ,Anwar ul-Haq Khakkar ,Pakistan ,Shebaz Sharif ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா