×

இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் நேரடி விமான சேவை: 3 ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்

சென்னை: இந்தோனேசியா நாட்டில் உள்ளது வடக்கு சுமத்திரா மாகாணம். இயற்கை எழில் மிகுந்த இப்பகுதிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும். வடக்கு சுமத்திரா மாகாணத்திற்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைஇல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சுமத்திரா மாகாண தலைநகர் மேடான் விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி தினசரி விமான சேவையை தொடங்க, பாட்டிக் ஏர் விமான நிறுவனம் முடிவு செய்தது. சென்னை -இந்தோனேசியா இடையே, ஏற்கனவே இதே விமான நிறுவனம், 2017ம் ஆண்டு விமான சேவையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு காரணமாக இந்த விமான சேவை, 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டு இடைவெளிக்கு பின்பு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. பாட்டிக் ஏர் விமான நிறுவனத்தின், முதல் விமான சேவை, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. போயிங் 737-800 ரக விமானம், நேற்று முன்தினம் மாலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்திலிருந்து 51 பயணிகளுடன் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வர வேண்டும்.

ஆனால், விமானம் தாமதமாக இரவு 10.45 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்தோனேசியா நாட்டிலிருந்து சென்னைக்கு முதல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து அந்த விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மீண்டும் மேடான் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேடான் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

The post இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் நேரடி விமான சேவை: 3 ஆண்டுகளுக்கு பின் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sumatra, Indonesia ,Chennai ,North Sumatra ,Indonesia ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை,...