×

வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான முத்தவல்லிகள் பிரிவிற்கு இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் அதிகாரி, ஆணையர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அலுவலகம், சேப்பாக்கம், சென்னை-600 005. முதன்மை செயல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வக்பு வாரியம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001, அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-ன் அதிகாரபூர்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படுகிறது.

The post வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Waqbu ,Board ,Muthavalli elections ,Chennai ,Tamil Nadu Government ,Muthavallis ,Waqbu Board ,
× RELATED மழையின்போது மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்