×

சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன், ஓசூர் ராஜாஜி நகரில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது, ஓசூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆகஸ்ட் 28ம்தேதி முதல் சிறுமியை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை, வினோத்குமார் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து, பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும், போக்சோ வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார். அதில், வினோத்குமார் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Vinod Kumar ,Singarapet, Krishnagiri district ,Hosur Rajaji ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்