×

மகா மாரியம்மன் கோயிலில் சுமங்கலி விளக்கு பூஜை

 

நீடாமங்கலம், ஆக.12: நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் சுமங்கலி விளக்கு பூஜை நடந்தது. நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் ஆலய மகாமாரியம்மன் கோயிலில் நேற்று 15 ம் ஆண்டு ஆடி கடை வெள்ளி திருவிழா நடந்தது. நேற்று காலை பத்தர்கள் வேண்டுதலை நிறை வேற்ற பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அன்னதான நிகழ்ச்சியும், மாலை சுமங்கலி விளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் ரமேஷ், ஆய்வாளர் ராசி, செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் நகரவாசிகள், ஆலய நல சங்கத்தினர் செய்திருந்தனர்.

The post மகா மாரியம்மன் கோயிலில் சுமங்கலி விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Sumangali ,Maha Mariamman temple ,Needamangalam ,Sumangali Lamp Puja ,Needamangalam Maha Mariamman Temple ,Needamangalam Chaturveda Vinayagar Temple… ,
× RELATED அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து