×

பொங்கலூர், உடுமலையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி

 

பல்லடம், ஆக.12: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட கழக துணை செயலாளர் வக்கீல் எஸ்.குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அசோகன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் பொங்கலூர் ஊராட்சி காந்தி நகர்,நாராயணநாயக்கன் புதூர் ஆகிய பகுதிகளில் இல்லம் தோறும் சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணியை பொங்கலூர் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.லோகுபிரசாத் தலைமையில் நடைபெற்றது. இப்பணியில் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்,கார்த்திக்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை: திமுக இளைஞரணி மாநில செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார், ஒன்றிய கழக தலைவர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி ஆகியோரது ஆலோசனையின் பேரில் எலையமுத்தூர் ஊராட்சி பகுதிகளில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிர்வாகி சுபாஷ் தலைமையில் நடைபெற்றது. அருகில் துணை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள்.

The post பொங்கலூர், உடுமலையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணி appeared first on Dinakaran.

Tags : DMK ,Pongalur, Udumalai ,Palladam ,Tirupur North District ,K. Selvaraj ,MLA ,Deputy Secretary ,District Association ,Vakeel ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...