×

இரும்பு லாக்கரை நிர்வாகிகள் முன்னிலையில் திறக்க கோரிக்கை குடியாத்தம் மசூதிக்கு கொடுக்கப்பட்ட

குடியாத்தம், ஆக.12: குடியாத்தம் மசூதிக்கு கொடுக்கப்பட்ட இரும்பு லாக்கரை நிர்வாகிகள் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் மோதின்பேட்டை பகுதியில் உள்ள மசூதிக்கு கொடுக்கப்பட்ட இரும்பு பெட்டிக்குள் புதையல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த நார் கம்பெனி உரிமையாளர் முகமது இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான இரும்பு பெட்டி என தெரியவந்தது. இவை 1 டன் எடை கொண்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியதாக தெரிவித்தார். தற்போது அதனை மசூதிக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் இரும்பு பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்ன என தெரியவில்லை. பெட்டியை தொழிலாளர்கள் மூலம் உடைக்க கடும் முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து கிரேன் மூலம் அருகே உள்ள இரும்பு கடைக்கு கொண்டு சென்று உடைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர், இரும்பு பெட்டி குடியாத்தம் தாலுகா அலுவலகத்துக்க கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மசூதி நிர்வாகிகள் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து இரும்பு பெட்டியை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மசூதி நிர்வாகிகள் முன்னிலையில் பெட்டியை திறக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுக்கு பின்னரே இரும்பு பெட்டியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்டியை திறப்பதற்கு வல்லுனர்கள் வரவழைக்கப்படுவார்கள். இந்த பெட்டி தொல்லியல் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும்’ என்றனர்.

The post இரும்பு லாக்கரை நிர்வாகிகள் முன்னிலையில் திறக்க கோரிக்கை குடியாத்தம் மசூதிக்கு கொடுக்கப்பட்ட appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Gudiatham mosque ,Gudiatham… ,Dinakaran ,
× RELATED ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்