×

3 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி பரிந்துரை ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த மறுத்த நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதிரடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம், தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து தலா 1 நீதிபதியும், குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து ஒரு நீதிபதியையும் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒதுக்கீடு 75. தப்போது 63 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா கோபி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயரவுள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த 4 பேரின் பெயர்கள் இன்னும் ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் வேறு நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரசாக்கை பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றங்களுக்கு 4 நீதிபதிகள் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post 3 நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி பரிந்துரை ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த மறுத்த நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai Aicourt ,Rahul Gandhi ,Patna ,Supreme Court ,Chennai ,Chennai High Court ,Allahabad High Court ,Telangana High Court ,Gujarat High Court ,iCordt ,
× RELATED மாற்றத்தின் புயல் நாடு முழுவதும்...