×

நியூயார்க் போலீசில் சீக்கியர் தாடி வளர்க்க தடை: இந்திய தூதரகம் கடும் கண்டனம்

நியூயார்க்: காவல்துறையில் பணியாற்றும் சீக்கியர் தாடி வளர்க்க தடை விதித்ததற்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் மாநில போலீசாக பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரன்ஜோத் திவானா கடந்தாண்டு மார்ச் மாதம் தனது திருமணத்திற்காக தாடி வளர்க்க காவல் துறையில் அனுமதி கோரினார். ஆனால் அது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நியூயார்க் மாநில ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, `இது மத ரீதியிலான பாகுபாடாகும்’ என்று பிரச்சினை பற்றி எடுத்துக் கூறினர். மேலும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த விவகாரம் பற்றி எடுத்துக் கூறினார்.

The post நியூயார்க் போலீசில் சீக்கியர் தாடி வளர்க்க தடை: இந்திய தூதரகம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Sikhs ,New York ,Indian embassy ,Washington ,Dinakaran ,
× RELATED லண்டன் இந்திய தூதரகம் மீது தாக்குதல்:...