தாக்கா: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் களமிறங்க உள்ள வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 30ல் தொடங்கி செப்.17 வரை நடைபெற உள்ளது. அடுத்து ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடர் அக்.5 முதல் நவ.19 வரை நடக்க உள்ளது. இந்த 2 தொடர்களுக்குமான வங்கதேச அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் (36 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, தமிம் இக்பால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பதிலாக ஷாகிப் மீண்டும் தலைமை ஏற்கிறார். டெஸ்ட், டி20, ஒருநாள் என 3 வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் வங்கதேச அணி கேப்டனாக செயல்பட உள்ளார். ஏற்கனவே ஷாகிப் தலைமையில் விளையாடிய 50 ஒருநாள் போட்டிகளில், வங்கதேச அணி 23 வெற்றி, 26 தோ ல்வி கண்டு ள்ளது (1 போட்டியில் முடிவு இல்லை).
The post ஆசிய கோப்பை, உலக கோப்பை வங்கதேச அணிக்கு ஷாகிப் ஹசன் கேப்டன் appeared first on Dinakaran.