×

மயிலாடுதுறையில் பருவமழை தீவிரம் வீடு, காவல் நிலைய சுவர்கள் இடிந்து விழுந்தது-பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் திருக்கடையூர் தரங்கம்பாடி, சீர்காழி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மயிலாடுதுறை கடைவீதிகளில் சாலையோர தரைக்கடை வியாபாரிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தீவிரமடைந்ததால் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். நேற்று மதியம் முதல் மாலைவரை மழை இல்லாததால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர், பொதுமக்களும் தரைக்கடையில் கூடினர்.மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் 100 ஆண்டுக்குமேல் செயல்பட்டுவந்த காவல் நிலைய ஓட்டுக்கட்டிட சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் வாகனமோ பொதுமக்களோ யாரும் செல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை. கட்டிடம் சாலையில் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குத்தாலம்: குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு சிலம்பாக்கம் தேரடி பகுதியை சேர்ந்தவர் நைனாசெட்டி (54). விவசாயி. இவருக்கு சொந்தமான ஓட்டுவீடு கனமழையின் காரணமாக சேதமடைந்து நேற்று மாலை வீட்டின் ஒரு புறம் உள்ள செங்கல் சுவர் இடிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மாலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.மழையளவு (மி.மீட்டரில்) மயிலாடுதுறை 40, மணல்மேடு 31, தரங்கம்பாடி 10, சீர்காழி 18, கொள்ளிடம் 10, என பதிவாகியுள்ளது. மேலும் நேற்று காலை முதல் மாலைரை விட்டுவிட்டு மழை பெய்தது. தாளடி மற்றும் சம்பா நடவுப் பணியில் சமீபத்தில் நட்ட நாற்றுகள் மட்டும் தொடர்மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை 35 ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. தற்பொழுது பெய்துவரும் மழை நின்றாலும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மழைநீதில் அழுகிவிடும் என காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கொள்ளிடம்: கொள்ளிடம், புத்தூர், அரசூர்,எருக்கூர்,மாதானம், ஆச்சாள்புரம்,புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் பகுதியில் பிரம்பு மற்றும் கோரைபாய் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 14 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் சம்பா நடவு பயிர் சாகுபடி செய்யும் இலக்கை வைத்து தீவிர பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தொடர் மழையால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்….

The post மயிலாடுதுறையில் பருவமழை தீவிரம் வீடு, காவல் நிலைய சுவர்கள் இடிந்து விழுந்தது-பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthu ,Mayaladududurai ,Tamil Nadu ,Mayiladuthur district ,Sembanargo ,Kuttalam ,Sandalmad ,Mangagainallur ,Thirakadayur ,Mayelago ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...